Page Loader
'96' பட இயக்குனரின் அடுத்த திரைப்படம்: 'கார்த்தி 27' பூஜை வீடியோ வெளியீடு

'96' பட இயக்குனரின் அடுத்த திரைப்படம்: 'கார்த்தி 27' பூஜை வீடியோ வெளியீடு

எழுதியவர் Sindhuja SM
Feb 24, 2024
11:01 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த 96 திரைப்படத்தின் இயக்குநர் தனது அடுத்த திரைப்படத்தை கார்த்தியின் நடிப்பில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். டி என்டர்டெயின்மெண்ட் அந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனால், இந்த படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதற்கான பூஜை வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பூஜை வீடியோவையும் வெளியிட்டு, 'கார்த்தி 27' திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'கார்த்தி 27' பூஜை வீடியோ வெளியீடு