வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள்
தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை பலவித கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல நடிகர்களும், சவாலான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, நடிப்பால் ரசிகர்கள் இதயத்தில் நீங்க இடம்பிடிக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு, வெள்ளித்திரையில் நம்மை கண்கலங்க வைக்கும் அப்பாவாக, நெகிழ வைத்த அப்பாவாக, உணர்ச்சித்ததும்பிய நடிப்பால் நம்மை கவர்ந்த சில கதாபாத்திரங்களும், நடிகர்களும் இங்கே: கவுதம் மேனன் இயக்கத்தில், 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் சூர்யா. 'கிருஷ்ணா'வாக தந்தை வேடத்தில் கலக்கி இருந்தார் சூர்யா. கதையில் சிறிது நேரமே அப்பாவாக நடித்திருந்தாலும், முழு கதையையும் தாங்கி பிடிக்கும் கதாபாத்திரம் அந்த அப்பா தான். மகனை புரிந்து கொள்ளும், ஊக்கப்படுத்தும் அப்பாவாக, எதார்த்தமாக நடித்திருந்தார் சூர்யா.
'கப் முக்கியம் பிகிலு!!'
அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்திருந்த 'தெறி' திரைப்படத்தில், பாசமிகு தந்தையாகவும், கடமை தவறாத காவல் அதிகாரி வேடத்திலும் வித்தியாசமான நடிப்பை தந்திருந்தார் விஜய். அதன் பிறகு, 'பிகில்' படத்தில், அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 'அசுரன்' படத்தின் சிவாசாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த கதாபாத்திரம் தான் தனுஷிற்கு இரண்டாம் முறையாக தேசிய விருதை வாங்கி தந்தது. 'கண்ணான கண்ணே' என பேசப்போராட்டத்தில் அனைவரையும் கவர்ந்தார் இந்த 'விஸ்வாசம்' அஜித். கேங்ஸ்டர்அஜித்தாகவும், 'அப்பா' அஜித்தாகவும் அவர் இயல்பாக நடித்திருந்தார். இந்த இளம் நடிகர் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் நடிகர் கவின். சமீபத்தில் தமிழில் வெளியான 'தாதா'வில் சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் பாராட்டி இருந்தனர்.