சிஎஸ்கேவில் தோனி இத்தனை காலமாக நீடிக்க காரணம் இந்த 3 விஷயங்கள் தான் : ரவி சாஸ்திரி!
ஐபிஎல் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி நீடிப்பது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஐபிஎல்லில் நான்கு முறை பட்டங்களை வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 இல் சேர்ந்த எம்எஸ் தோனி, அது தடை செய்யப்பட்ட 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களைத் தவிர, மற்ற அனைத்து முறையும் விளையாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்காத நிலையில், இந்த முறை மீண்டும் இங்கு விளையாடப்படுவதால், ரசிகர்கள் மிகப்பெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
தோனிக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கிடைப்பது குறித்து பேசிய ரவி சாஸ்திரி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வீரர்கள் வந்து சென்றாலும் தோனி மட்டும் இப்போது வரை அசைக்க முடியாத வீரராக தொடர்வது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, "அவர் அணியுடன் மிகவும் உணர்ச்சிகரமாக இணைந்துள்ளார். இரண்டாவது அவர் அணிக்கு மிகவும் விசுவாசமாக உள்ளார். மூன்றாவதாக சென்னையில் அவருக்கு ரசிகர்கள் வழங்கிய அந்தஸ்து. இதனால் தான் சென்னை அணியில் அவர் மிகப்பெரிய உள்ளார்." என்று கூறினார். மேலும் அவுட்ஃபீல்டில் தோனி மிகவும் செயல்படுகிறார் என்றும் அவர் பாராட்டினார். குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டபோது, தோனி "மைண்ட் கேம்ஸ்" விளையாடியதால் தான் ரோஹித் சர்மா தவறான ஸ்ட்ரோக் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பாராட்டினார்.