Page Loader
'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ்
'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ்

'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ்

எழுதியவர் Nivetha P
Aug 23, 2023
06:58 pm

செய்தி முன்னோட்டம்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் கதாபாத்திரத்தில் ஆண்டனியாக விஷாலும், ஜாக்கி பாண்டியன் என்னும் வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா, செல்வராகவன், சுனில், கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'அதிருதா' என்னும் பாடல் ஜூலை மாதம் 15ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான 'ஐ லவ் யூ டி' பாடல் சற்றுமுன்னர் இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

2ம் சிங்கிள்