Page Loader
மிஸ் வேர்ல்ட் 2023: இந்தியா சார்பில் போட்டியிடும் சினி ஷெட்டி பற்றி சில தகவல்கள்
மிஸ் வேர்ல்ட் 2023-ல் இந்தியாவிற்காக போட்டியிடும் 21 வயதே ஆன சினி ஷெட்டி!

மிஸ் வேர்ல்ட் 2023: இந்தியா சார்பில் போட்டியிடும் சினி ஷெட்டி பற்றி சில தகவல்கள்

எழுதியவர் Arul Jothe
Jun 12, 2023
10:42 am

செய்தி முன்னோட்டம்

மிஸ் வேர்ல்ட் 2023, போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த 71வது உலக அழகி போட்டி, நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலக அழகி போட்டியில், இந்தியா சார்பாக போட்டியிடப்போவது, 'ஃபெமினா மிஸ் இந்தியா' 2022-ன் வெற்றியாளரான சினி ஷெட்டி. இவர், மிஸ் இந்தியா 2022-ல் நடத்தப்பட்ட துணை போட்டிகளில் 'மிஸ் டேலண்ட்' விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது . கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட சினி ஷெட்டி, மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கணக்கியல் & நிதியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற சினி ஷெட்டி, பட்டய நிதி ஆய்வாளராக (CFA) பணிபுரிகிறார். நான்கு வயதிலேயே பரதநாட்டியம் பயில தொடங்கிய இவர், 14 வயதில் அரங்கேற்றம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மிஸ் வேர்ல்ட் 2023