Page Loader
நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்
பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பையே பெற்றிருந்தது.

நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்

எழுதியவர் Srinath r
Oct 21, 2023
02:27 pm

செய்தி முன்னோட்டம்

சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. பி வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருந்தத இப்படத்திற்கு. ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் இம்மாதம் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நெட்பிளிக்ஸில் சந்திரமுகி 2