LOADING...
விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்
விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்

எழுதியவர் Srinath r
Oct 15, 2023
02:31 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அஜர்பைஜான் நாட்டில், விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அவர் அங்கு ஏற்பட்ட மாரடைப்பால் இன்று உயிரிழந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர், வேலாயுதம், அண்ணாத்த, வீரம் உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படம், குறித்து அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இருந்த போதும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜான் நாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மாரடைப்பு உயிரிழந்த கலை இயக்குநர் மிலன்