சுப்ரமணியபுரம் 15 : மீண்டும் இயக்குனராகும் சசிகுமார்
கோலிவுட்டின் பன்முகக்கொண்ட நடிகராக இருப்பவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற பல படங்கள் வெற்றி அடைந்தாலும், இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்ய காரணமாக இருந்தது 'சுப்ரமணியபுரம்' திரைப்படமே. சசிகுமாரின் முதல் படமான இந்த படத்தின் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பல அவதாரங்களை எடுத்தார். அவரின் இயக்கத்திற்கு பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தது. இந்த திரைப்படம், அதில் நடித்த ஜெய், சசிகுமார், கஞ்சா கருப்பு அகியோருக்கு மிகப்பெரிய திருப்புனையை தந்தது எனலாம். இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் சசிகுமார். அதோடு, தான் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.