கடந்த ஆண்டு 10 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற கோலிவுட் - இந்தாண்டின் நிலவரம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவில் மிக மதிப்பிற்குரிய விருதுகளுள் ஒன்று தான் 'தேசிய விருது'.
கடந்த 69 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு கலைஞர்களை சிறப்பித்து வருகிறது.
அதன்படி 2022ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்பான திரைக்கதை, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 5 பிரிவுகளில் 5 விருதுகளை நடிகர் சூர்யா நடித்து வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் தட்டிச்சென்றது.
கொரோனா காலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி'யில் வெளியானது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
அதோடு சிறந்த அறிமுக இயக்குனர் விருது யோகிபாபு நடித்து வெளியான 'மண்டேலா' திரைப்பட இயக்குனர் மடோனா அஸ்வினுக்கு கிடைத்தது.
அதுமட்டுமின்றி சிறந்த வசனத்திற்கான தேசிய விருதும் மடோனா அஸ்வினுக்கு அளிக்கப்பட்டது.
விருது
தேசிய விருதிற்காக 280 திரைப்படங்கள் போட்டி
அதனை தொடர்ந்து, சிறந்த எடிட்டருக்கான விருது ஸ்ரீகர் பிரசாத்திற்கு அளிக்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமௌலிக்கு வழங்கப்பட்டது.
இறுதியாக சிறந்த தமிழ் படத்திற்கான விருது இயக்குனர் வசந்த்தின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்னும் படத்திற்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட்.,24) தமிழ் திரைப்படவுலகின் 2023ம் ஆண்டு தேசிய விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.
அதன்படி, கடந்தாண்டை விட இந்தாண்டு கோலிவுட் சினிமா உலகம் அதிகளவு தேசிய விருதுகளை பெற்று குவிக்குமா? என்னும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்தாண்டு தேசிய விருதிற்காக 280 திரைப்படங்கள் போட்டியிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.