கலவையான விமர்சனங்களை ஈர்க்கும் Zomatoவின் வாடிக்கையாளர்களுக்கான வேண்டுகோள்
நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான சோமாட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து நேற்று, ஞாயிற்றுக்கிழமை, எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) ஒரு பதிவை இட்டுள்ளது Zomato. அதன்படி, மிகவும் அவசியமான பட்சத்தில் பிற்பகல் நேரங்களில் ஆர்டர் செய்யுமாறு வாடிக்கையாளர்களிடத்தில் வேண்டுகோள் வைத்துள்ளது. இந்த பதிவு கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சில வாடிக்கையாளர்கள், டெலிவரி பணியாளர்களுக்கு சவாலான நிலைமைகளை ஒப்புக்கொண்டு, நிறுவனத்தின் இந்த மனிதபினான செயலை பாராட்டினர். இருப்பினும், மற்றவர்கள் இந்த கோரிக்கையால் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக உணவு விநியோகத்தை பெரிதும் நம்பியிருக்கும் தனி நபர்களுக்கு இதனால் ஏற்படக்கூடிய சிரமம் குறித்து கவலைகள் எழுப்பினர்.
Zomatoவின் கோரிக்கை
pls avoid ordering during peak afternoon unless absolutely necessary 🙏— zomato (@zomato) June 2, 2024