அனைத்து விதமான பொருட்களையும் விற்க டார்க் ஸ்டோர்களை விரிவாக்கம் செய்ய உள்ளது செப்டோ
இந்தியா: விரைவு-வணிக நிறுவனமான செப்டோ அதன் டார்க் ஸ்டோர் வலையமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது மளிகை பொருட்களை மட்டும் விநியோகித்து வரும் செப்டோ, மளிகை அல்லாத விநியோகத்தை ஆழமாக ஆராய்வதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கணிசமான முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நான்கு ஆண்டு பழமையான ஸ்டார்ட்அப், வரும் மாதங்களில் முக்கிய நகரங்களில் ஒன்று அல்லது இரண்டு பெரிய டார்க் ஸ்டோர் வசதிகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டார்க் ஸ்டோர் வசதிகள் எலக்ட்ரானிக்ஸ், உபகரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் கேமிங் கன்சோல்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களை விநியோகிப்பதற்கான மையங்களாக செயல்படும்.
செப்டோவின் புதிய திட்டம்
செப்டோ ஏற்கனேவே ஒரு சில நகரங்களில் இந்த பொருட்களில் சிலவற்றை வழங்கி வருகிறது. எனினும், டார்க் ஸ்டோர்கள் மேலும் விரிவுபடுத்தப்படுவதால் இன்னும் பெரிய இதை செய்ய முடியும் என்று செப்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது பெரும்பாலான முக்கிய நகரங்களில் 2 கிமீ சுற்றளவில் செப்டோவின் சிறிய டார்க் ஸ்டோர்கள் அமைந்துள்ளன. எனவே, பெரிய டார்க் ஸ்டோர்களை நிறுவி பெரிய அளவில் இதை செய்ய செப்டோ திட்டத்தமிட்டுள்ளது. 2021 இல் நிறுவப்பட்ட செப்டோ நிறுவனம், தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே Y காம்பினேட்டர் மற்றும் நெக்சஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் போன்ற குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களிடமிருந்து $150 மில்லியனுக்கும் அதிகமான நிதியைப் பெற்ற பின்னர் விரைவாக வளர்ச்சியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.