மார்ச் 15க்குப் பிறகு பேடிஎம் FASTagஐ ரீசார்ஜ் செய்ய முடியாது: புதிய FASTagஐ எப்படி வாங்குவது?
செய்தி முன்னோட்டம்
பேடிஎம்மின் டிஜிட்டல் வாலட், டெபாசிட்கள் மற்றும் கிரெடிட் தயாரிப்புகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம்மிடம் கடந்த மாதம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், பிப்ரவரி 29 முதல், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் வாலட்டில் புதிய டெபாசிட்கள் ஏற்கொள்ளப்படாது. பிப்ரவரி 29க்கு மேல், பேடிஎம் FASTagஐ ரீசார்ஜ் செய்ய முடியாது என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வாலட்டுகள், ஃபாஸ்டேக்குகள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் போன்றவற்றில் எந்த பரிவர்தனையும் செய்யமுடியாது.
பேடிஎம் FASTags கணக்கில் ஏற்கனவே உள்ள பணத்தை பயன்படுத்தி டோல் பூத்துகளில் பணத்தை செலுத்தமுடியும். ஆனால் மார்ச் 15க்குப் பிறகு எந்த டாப்-அப்களும் அனுமதிக்கப்படாது.
Paytm FASTag
பேடிஎம் FASTagஐ செயலிழக்க செய்வது எப்படி?
1. 1800-120-4210 என்ற எண்ணுக்கு டயல் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் வாகனப் பதிவு எண்(VRN) அல்லது டேக் ஐடியை வழங்கவும்.
2. அதனைத்தொடர்ந்து, ஒரு பேடிஎம் வாடிக்கையாளர் ஏஜென்ட் உங்கள் FASTag மூடப்பட்டதை உறுதி செய்வார்.
(அல்லது)
1. பேடிஎம் ஆப்பை திறந்து சுயவிவர ஐகானைத் தட்டவும்.
2. "Help & Support" என்பதைத் தேர்ந்தெடுத்து, "Banking Services & Payments" > "FASTag." என்பதற்குச் செல்லவும்.
3. "Chat with us" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்யும்படி நிர்வாகியிடம் கோருங்கள்
Paytm FASTag
ஆன்லைனில் புதிய FASTagஐ வாங்குவது எப்படி?
1. Google Play Store அல்லது Apple App Store இலிருந்து "My FASTag" ஆப்பை பதிவிறக்கவும்.
2. "Buy FASTag" என்பதைக் கிளிக் செய்து, மின் வணிக இணைப்பை பெறவும்.
3. அந்த இணைப்பின் மூலம் FASTagஐ வாங்கவும். அது உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.
ஆண்ட்ராய்டுக்கு - https://play.google.com/store/apps/details?id=com.fastaguser&hl=en_IN
iOSக்கு- https://apps.apple.com/in/app/my-fastag/id1492581255
Paytm FASTag
ஆன்லைனில் உங்கள் FASTagஐ எவ்வாறு செயல்படுத்துவது?
1. "My FASTag" ஆப்பை திறந்து "Activate FASTag" என்பதைக் கிளிக் செய்யவும்.
2. Amazon அல்லது Flipkart ஐத் தேர்ந்தெடுக்கவும்.
3. FASTag ஐடியை உள்ளிடவும் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
4. உங்கள் வாகன விவரங்களை உள்ளிடவும். அதன் பின், உங்கள் புதிய FASTag செயல்படுத்தப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
பின்வரும் வங்கிகளிலிருந்தும் நீங்கள் FASTagஐ வாங்கலாம்
Travel hassle-free with FASTag! Buy your FASTag today from authorised banks.@NHAI_Official@MORTHIndia pic.twitter.com/LI7xpMwfr4
— FASTagOfficial (@fastagofficial) February 16, 2024