Page Loader
தங்கள் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL
ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL

தங்கள் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 17, 2023
04:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களுடைய 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. இரு நிறுவனங்களின் முடிவுகளுமே சந்தை வல்லுநர்களின் மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. மேலும், ஹெச்சிஎல் நிறுவனமானது, தங்களுடைய மதிப்பீட்டையே பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்சிஎல் நிறுவனத்தின் தொகுக்கப்பட்ட நிகர லாபமானது 7.6% உயர்ந்து ரூ.3,534 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அந்நிறுவனத்தின் வருவாயும் முதல் காலாண்டில் 12% உயர்ந்திருக்கிறது. வருடாந்திர அளவில், விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபமும் 12% உயர்ந்திருக்கிறது. எனினும், கடந்த காலாண்டை விட 6.65% குறைந்தும் இருக்கிறது. அதேபோல் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயானது, வருடாந்திர அளவில் 6% உயர்ந்தும், காலாண்டு அளவில் 1.5% குறைந்தும் இருக்கிறது.

வணிகம்

ஊதிய உயர்வைத் தள்ளி வைத்த நிறுவனங்கள்:

தங்களது காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து, தங்கள் ஊழியர்கள் வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு காலாண்டிற்கு தள்ளி வைத்திருக்கிறது ஹெச்சிஎல். எப்போதும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலேயே ஊதிய உயர்வை அந்நிறுவனம் வழங்குது வழக்கம். அதேபோல் விப்ரோ நிறுவனமும் தங்களது ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு காலாண்டிற்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. விப்ரோவும் செப்டம்பர் மாதத்தில் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வங்குவது வழக்கம். ஆனால், இந்தியாவின் மற்றொரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், தங்கள் ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வை வழங்கியிருப்பதோடு, ஏப்ரல் 1, 2023 அடிப்படையில் அவை அமலுக்கு வரும் எனவும் தெரிவித்திருக்கிறது.