ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை
பேடிஎம் தலைமை நிர்வாகி நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது, சமீபத்திய RBI கட்டுப்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், பேடிஎம்மின் டிஜிட்டல் வாலட், டெபாசிட்கள் மற்றும் கிரெடிட் தயாரிப்புகளை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம்மிடம் கேட்டுக் கொண்டது. பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சித்து வருகிறார். இந்த பிரச்சனையால் பேடிஎம் பங்குகள் 40% மேல் சரிந்தன. இந்த செவ்வாய் கிழமை தான் அது மீண்டு வந்தது. இந்நிலையில், நேற்று பேடிஎம் தலைமை நிர்வாகி விஜய் சேகர் சர்மா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திதார்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்த பேடிஎம் சிஇஓ
ரிசர்வ் வங்கியுடனான சிக்கலைத் தீர்த்துக்கொள்ளவும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அரசாங்கம் பேடிஎம்மிடம் கேட்டுக் கொண்டது. இதற்கிடையில், சிஇஓ விஜய் சேகர் சர்மா நேற்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளையும் சந்தித்து ஒழுங்குமுறை கவலைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 29க்குப் பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், வாலட்கள் மற்றும் FASTags போன்றவற்றில் டெபாசிட்களை ஏற்கவோ அல்லது கடன் பரிவர்த்தனைகளை அனுமதிக்கவோ அல்லது டாப்-அப்களையோ அனுமதிக்கவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி Paytm Payments Bank Ltdக்கு கடந்த வாரம் தடை விதித்தது. ஆனால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள நிலுவைகளை வரம்புகள் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவு கூறியுள்ளது.