Page Loader
வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர்
வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்தி ஊபர்

வெளியூர் பயணங்களுக்கும் 'Round Trip' வசதியை அறிமுகப்படுத்திய ஊபர்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 19, 2023
04:47 pm

செய்தி முன்னோட்டம்

இதுவரை நகருக்குள் மட்டுமே ரவுண்டு ட்ரிப் வசதியை வழங்கி வந்த ஊபர் நிறுவனம், இனி வெளியூர் பயணங்களுக்கும் ரவுண்டு ட்ரிப் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன்படி, இனி ஐந்து நாட்கள் வரையிலான வெளியூர் பயணங்களுக்கு ஊபரின் ரவுண்டு ட்ரிப் வசதியினைப் பயன்படுத்த முடியும். அந்த பயணம் முழுவதும் ஒரே கார் மற்றும் ஒரே டிரைவரையே பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகைக் காரைப் போலவே நமக்கு வேண்டிய இடங்களில் காரை நிறுத்திக் கொள்ளும் வசதியையும் இதன் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஊபர். ஆனால், காத்திருப்பு நேரம் மற்றும் இரவு டிரைவருக்கான தங்கும் செலவு உள்ளிட்டவற்றுக்கு நாமே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஊபர்

90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு: 

அது மட்டுமின்றி, 90 நாட்களுக்கு முன்பே ஒரு காரை பயணத்திற்கு முன்பதிவு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஊபர். இதன் மூலம் ஊபர் டிரைவர்களும் தங்களுடைய பயணத்திட்டங்களை முன்பே திட்டமிட்டுக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. வெளியூருக்கு ரவுண்டு ட்ரிப் மேற்கொள்ள, ஊபர் செயலியில் Intercity-யை தேர்ந்தெடுத்து பின்னர் ரவுண்டு ட்ரிப் என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், உடனடியாகவும் வெளியூர் ரவுண்டு ட்ரிப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. நம்முடைய பயணம் முழுவதும் ட்ராக்கிங் வசதி அளிக்கப்படுவதால் பாதுகாப்பான பயணத்தை ஊபர் வாடிக்கையாளர்கள் பெற முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.