Page Loader
மீண்டும் குறைந்தது விலை; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 
இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

மீண்டும் குறைந்தது விலை; இன்றைய (ஜூன் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2025
10:47 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஜூன் 28) சரிவை சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹55 குறைந்து ₹8,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹440 குறைந்து ₹71,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹60 குறைந்து ₹9,742 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹480 குறைந்து, ₹77,936 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

இதற்கிடையே, 18 காரட் தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹45 சரிந்து ₹7,360 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹360 சரிந்து ₹58,880 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று சரிந்துள்ளது. வெள்ளி விலை சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ₹0.10 குறைந்து ₹117.80 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹100 குறைந்து ₹1,17,800 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.