
கிராமுக்கு ரூ.5 குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 23) விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை உயர்ந்த நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹5 குறைந்து ₹9,230 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹40 குறைந்து ₹73,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹6 குறைந்து ₹10,069 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹48 குறைந்து, ₹80,552 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சரிவு
இதற்கிடையே, 18 காரட் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,600 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹60800 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை சற்று சரிந்துள்ளது. வெள்ளி விலை திங்கட்கிழமை நிலவரப்படி ஒரு கிராமுக்கு ₹0.10 குறைந்து ₹119.90 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹100 குறைந்து ₹1,19,900 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் உள்ளிட்ட சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.