Page Loader
இறங்கிய வேகத்தில் ஏறிய விலை; இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இறங்கிய வேகத்தில் ஏறிய விலை; இன்றைய (ஜூன் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2025
12:01 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சரிந்த நிலையில் சனிக்கிழமை (ஜூன் 21) மீண்டும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹25 உயர்ந்து ₹9,235 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹200 அதிகரித்து ₹73,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹27 அதிகரித்து ₹10,075 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹216 அதிகரித்து, ₹80,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹20 அதிகரித்து, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,600 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹160 அதிகரித்து ₹60800 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி தொடர்கிறது. வெள்ளி விலை சனிக்கிழமை நிலவரப்படி எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராமுக்கு ₹120 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் உள்ளிட்ட சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.