LOADING...
நான்கு நாட்கள் உயர்வுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 16) விலை நிலவரம் 
இன்றைய (ஜூன் 16) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நான்கு நாட்கள் உயர்வுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை; இன்றைய (ஜூன் 16) விலை நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Jun 16, 2025
09:59 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை கடந்த நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், திங்கட்கிழமை (ஜூன் 16) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹15 குறைந்து ₹9,305 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹120 குறைந்து ₹74,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹17 குறைந்து ₹10,151 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹136 குறைந்து, ₹81,208 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் வீழ்ச்சி

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹10 குறைந்து, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,660 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹80 குறைந்து ₹61,280 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளி விலை திங்கட்கிழமை நிலவரப்படி ₹.10 குறைந்து ஒரு கிராமுக்கு ₹119.90 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1,19,100 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் உள்ளிட்ட சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.