LOADING...
வாரத்தின் முதல் நாளே மகிழ்ச்சி; தங்கம் விலை இவ்ளோ சரிவா! இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளே மகிழ்ச்சி; தங்கம் விலை இவ்ளோ சரிவா! இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (ஜூலை 13), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 குறைந்து ₹13,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹1,05,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹109 குறைந்து ₹14,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹872 குறைந்து ₹1,15,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹100 குறைந்து ₹11,020 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 குறைந்து ₹88,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

Advertisement