LOADING...
ஏறிய வேகத்தில் சரிவு! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஏறிய வேகத்தில் சரிவு! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 11), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹13,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,06,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 குறைந்து ₹14,509 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 குறைந்து ₹1,16,072 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 குறைந்து ₹11,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹88,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹2,45,000 ஆக விற்கப்படுகிறது.

Advertisement