ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக, தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பீட்டாளரான போசுஸ்(Prosus), அதன் மதிப்பை $3 பில்லியனுக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அதன் உச்ச மதிப்பான, $22 பில்லியனை விட இது 86% குறைவு.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் விரைவான விரிவாக்கத்தை கண்ட அந்நிறுவனம், தற்போது பணம் புழக்க பிரச்சனை மற்றும் $1.2 பில்லியன் கடனில் சிக்கியுள்ளது.
கடந்த ஒரு வருட காலத்தில் போசுஸ் மற்றும் பிளாக்ராக் உள்ளிட்ட பங்குதாரர்கள், பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பை $11 பில்லியனாக மார்ச்சிலும், $8 பில்லியனாக மே மாதத்திலும், $5 பில்லியனாக ஜூன் மாதத்திலும் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
௨ந்ட card
பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு சரிந்ததற்கு என்ன காரணம்?
கொரோனா பெருந்தொற்று காலத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததால், பைஜூஸ் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
அந்நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றியது. இருப்பினும், பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டதற்கு பின்னர், பைஜூஸ் நிறுவனத்தின் வளர்ச்சி சரிந்தது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் வழக்குகள், இந்நிறுவனத்தின் சவால்கள் தீவிரம் அடைவதை உணர்த்துகிறது.
போர்ஸ், பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்ததற்கான காரணங்களை குறிப்பிடவில்லை என்றாலும், பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து " அறிவுரைகளை புறக்கணித்ததாக" கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.
மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்ஸராக இருந்த பைஜூஸ் நிறுவனம், உரிய காலத்திற்குள் சுமார் $20 மில்லியன் ஸ்பான்சர்ஷிப் ராயல்டியை, வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.