Loading...
ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் மைக்கேல் டெல்
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் மைக்கேல் டெல்

ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் மைக்கேல் டெல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
02:43 pm

செய்தி முன்னோட்டம்

டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரான மைக்கேல் டெல், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸை பின்தள்ளி உலகின் 3-வது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். அவரது தொழில் வாழ்க்கையில் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் அவர் நுழைவது இதுவே முதன்முறையாகும். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களுக்கான உள்கட்டமைப்புத் தேவைகள் அதிகரித்துள்ளதால், டெல் நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன. நடப்பாண்டில் மட்டும் டெல் டெக்னாலஜிஸ் பங்குகள் 327% வரை உயர்ந்து, செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் $533.88 என்ற வரலாற்று உச்சத்தை எட்டின. ஒரே நாளில் மைக்கேல் டெல்லின் சொத்து மதிப்பு $4.6 பில்லியன் உயர்ந்து, மொத்த சொத்து மதிப்பு $267.7 பில்லியனை (சுமார் ₹22.5 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

தரவரிசை பட்டியல்

பணக்காரர்கள் தரவரிசை பட்டியல்

$942 பில்லியன் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் X நிறுவனர் எலன் மாஸ்க் உள்ளார்.

அடுத்த இடத்தில், $277.9 பில்லியன் மதிப்புடன் லேரி பேஜ் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் மைக்கேல் டெல் ($267.7 பில்லியன்) அடுத்ததாக ஜெஃப் பெசோஸ் ($265.2 பில்லியன்).

இவர் அமேசான் பங்குகள் சரிவால் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

1984-ஆம் ஆண்டு தனது 19-வது வயதில் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக விடுதி அறையில் வெறும் $1,000 முதலீட்டில் கணிப்பொறி நிறுவனத்தை தொடங்கிய மைக்கேல் டெல், இன்று ஏஐ (AI) கணினி உள்கட்டமைப்பு வளர்ச்சியால் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகப் பரிணமித்துள்ளார்.

ADVERTISEMENT