அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS
செய்தி முன்னோட்டம்
தொற்றுநோய் காலத்தில் நோய் பரவலை தவிர்ப்பதற்காக பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்(WFH) முறையை அமல்படுத்தியது.
தொற்றுநோய் காலம் முடிவடைந்த உடன் பல நிறுவனங்கள் படிப்படியாக இந்த முறையை நீக்க துவங்கின.
ஆரம்பத்தில் ஹைபிரிட் முறை, அதாவது வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் அலுவலகம் செல்வதும் மற்ற நாட்களில் WFH முறையில் பணி புரிவதும் என தேர்வு செய்யப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைத்து நிறுவனங்களும் தற்போது அலுவலகத்திலிருந்து பணி செய்வதை கட்டாயமாக்கிவிட்டது.
இந்த வரிசையில் கடைசியாக இணைந்தது, நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்.
தற்போது இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சதவீதத்தில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை எட்டியுள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண் ஊழியர்கள்
குறையும் பெண் ஊழியர்களின் விகிதாச்சாரம்
இந்த செயல்முறையை நடைமுறைபடுத்த எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது என்று ஒப்புக்கொண்டார் டாடா குழுமத்தின் மனிதவளத் தலைவர் மிலிந்த் லக்காட்.
இந்த நடைமுறைக்கு 18 மாதம் ஆனதாகவும், பல கடின முயற்சிகளுக்கு பின்னரே சாத்தியமானதாகவும் கூறினார்.
6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பணிபுரியும் நிறுவனத்தில், வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகங்களில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, முன்னர் அறிவித்த 70 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
எனினும் இந்த செயல்முறையினால், இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 35.5 சதவீதமாக குறைந்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
பணி நீக்கங்கள்
பணி நீக்கங்களும், அதிகரிக்கும் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களும்
ஒரு நபரை பணியமர்த்தும்போது, அவரின் திறமையை உற்பத்தி செய்வதை அதன் பொறுப்பாக டிசிஎஸ் நிறுவனம் உணர்கிறது.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் திறன் பொருந்தாத தன்மைகள் அல்லது மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னரும், உற்பத்தித்திறன் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே, பணிநீக்கங்கள் நடைபெற வேண்டியது கட்டாயமாகிறது என்றார் லக்காட்.
இதற்கிடையில், தொழில்முறை பரீட்சைகளின் நேர்மையைத் தொடர்ந்து தேசிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆளுமை மற்றும் நெறிமுறைகள் மீதான கவனம் தொடர வேண்டும் என்று லக்காட் கூறினார்.
புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் தகுதிவாய்ந்த பொறியாளர்கள் என்று எஸ்பிஐ வெளிப்படுத்தியதில், நாடு ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்களை உருவாக்குகிறது என்றும், திறமைகள் கிடைப்பது குறித்து டிசிஎஸ் எந்த கவலையையும் பார்க்கவில்லை என்றும் லக்காட் கூறினார்.