Loading...
டாடா சன்ஸ் மீது ₹65 கோடி நஷ்டஈடு கோரி டாடா அறக்கட்டளைகள் வழக்குத் தொடர முடிவு: பின்னணி என்ன?
டாடா சன்ஸ் மீது ₹65 கோடி நஷ்டஈடு கோரி டாடா அறக்கட்டளைகள் வழக்குத் தொடர முடிவு

டாடா சன்ஸ் மீது ₹65 கோடி நஷ்டஈடு கோரி டாடா அறக்கட்டளைகள் வழக்குத் தொடர முடிவு: பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
12:50 pm

செய்தி முன்னோட்டம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக என்.சந்திரசேகரனை மீண்டும் நியமித்ததை எதிர்த்து டாடா அறக்கட்டளைகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை ₹50 கோடியும் ஆர்.டி.டாடா அறக்கட்டளை ₹15 கோடியும் என மொத்தம் ₹65 கோடி நஷ்டஈடு மற்றும் ஆண்டுக்கு 18% வட்டியும் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. டாடா சன்ஸ் மற்றும் அதன் 6 இயக்குநர்களுக்கு எதிராகத் தொடரப்படும் இந்த வழக்கில் வாரியக் கூட்டங்களில் தலைவரின் காஸ்டிங் வாக்கு அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

காஸ்டிங் வாக்கு சர்ச்சை

செப்டம்பர் 17 வாரியக் கூட்டத்தில் நடந்த மோதல் மற்றும் காஸ்டிங் வாக்கு சர்ச்சை

கடந்த செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழுக் கூட்டத்தில் சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா எதிராகவும் இயக்குநர் வேணு சீனிவாசன் ஆதரவாகவும் வாக்களித்த நிலையில் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஹரீஷ் மன்வானி தனது காஸ்டிங் வாக்கை பயன்படுத்தி மறுநியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

ஆனால் டாடா சன்ஸ் சட்டவிதி பிரிவு 121-ன் கீழ் அறக்கட்டளை நியமன இயக்குநர்களின் பெரும்பான்மை ஆதரவு அவசியம் என்றும் அதற்குப் பதிலாக காஸ்டிங் வாக்கை பயன்படுத்த முடியாது என்றும் அறக்கட்டளைகள் வாதிடுகின்றன.

வாரியக் கூட்டம்

நவம்பர் 30 வாரியக் கூட்டத்தின் முக்கியத்துவம்

இந்த வழக்கில் டாடா சன்ஸ் நிறுவனம் சந்திரசேகரன் சௌரப் அகர்வால் ஹரீஷ் மன்வானி அனிதா ஜார்ஜ் வேணு சீனிவாசன் மற்றும் நோயல் டாடா ஆகிய 7 பேர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் நோயல் டாடாவுக்கு எதிராக எந்த நிவாரணமும் கோரப்படவில்லை. வரும் நவம்பர் 30 அன்று நடைபெறும் டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் நிறுவனத்தின் ஐபிஓ திட்டம் மற்றும் சந்திரசேகரனின் மறுநியமன நடைமுறைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அதற்கு முன்பாகவே மீண்டும் காஸ்டிங் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் அவசர இடைக்காலத் தடை கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT