Loading...
செப்டம்பர் 2027 மாற்றத்திற்குத் தயார்! டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? வெளியான முதற்கட்டப் பட்டியல்
டாடா சன்ஸ் புதிய தலைவருக்கான போட்டி

செப்டம்பர் 2027 மாற்றத்திற்குத் தயார்! டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? வெளியான முதற்கட்டப் பட்டியல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

158 ஆண்டுகள் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், வரும் 2027 பிப்ரவரி மாதத்தில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குழுமத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் மற்றும் தேடுதல் முடிவுகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இந்திய அளவில் மிகப்பெரிய வர்த்தகக் சாம்ராஜ்யமாகத் திகழும் டாடா குழுமத்தில் சந்திரசேகரனின் இந்தத் திடீர் அறிவிப்பானது எதிர்பாராத தலைமை மாற்றத்திற்கான வழியை தற்போது உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக வர்த்தக உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டி

தலைவருக்கான போட்டியில் உள்ள முன்னணி சிஇஓக்கள்

டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவர் பதவிக்கான பரிசீலனைப் பட்டியலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சிஇஓ தச்சத் விஸ்வநாத் நரேந்திரன் முதன்மையானவராகத் திகழ்கிறார்.

இவருடன் டாடா பவர் நிறுவனத்தின் பிரவீர் சின்ஹா, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகனப் பிரிவின் ஷைலேஷ் சந்திரா மற்றும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ராமகிருஷ்ணன் முகூந்தன் ஆகிய மூத்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் டாடா குடும்பத்தைச் சேர்ந்த நோயல் டாடாவின் 32 வயது மகனான நெவில் டாடாவின் பெயரும் இப்பட்டியலில் முக்கியமாகக் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதனால் போட்டி கடுமையாகியுள்ளது.

தகுதி

நோயல் டாடாவின் பார்வை மற்றும் நரேந்திரனின் தகுதி

டாடா அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நோயல் டாடாவின் கருத்துக்கள் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

வங்கியாளர்களை விடத் துறை சார்ந்த அனுபவமிக்க நிபுணர்களே டாடா நிறுவனங்களை வழிநடத்த வேண்டும் என்றும், நிறுவனத்திற்கு உண்மையாகவும் திறமையாகவும் உழைத்த உள்ளூர் அதிகாரிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.

அந்த வகையில் 1988 முதல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 61 வயதான நரேந்திரன், நிறுவனத்தின் நிதிநிலையை வலுப்படுத்தி வளர்ச்சிப் பாதையில் செலுத்தியதன் மூலம் பலமான வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

நோயல் வழக்கமாக ஆலோசனை கேட்கும் இருவரில் நரேந்திரன் ஒருவராவார்.

ADVERTISEMENT

வாரிசுகள்

நோயல் டாடாவின் வாரிசுகள் போட்டியில் பங்கேற்பு

டாடா குடும்பத்தின் வாரிசுகளான நெவில் டாடா மற்றும் மாயா டாடா ஆகியோர் சமீபத்தில் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது பெயர்களும் தலைவர் பதவிக்கான விவாதத்தில் இடம்பெற்றுள்ளன.

நோயல் டாடா நேரடியாகப் தலைவராவதை விடத் தனது மகன் நெவில் அல்லது மகள் மாயாவுக்கு உயர் பொறுப்பை வழங்கி உயர்த்த விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதில் நெவில் டாடா டிரென்ட் நிறுவனத்தின் சூடியோ பிராண்டை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பிய அனுபவம் கொண்டவர்.

அதேபோல் மாயா டாடா, டாடா டிஜிட்டல் மற்றும் டாடா நியூ போன்ற மின்னணு வர்த்தகப் பிரிவுகளில் முக்கிய அனுபவம் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

தேர்வு செயல்முறை

முறையான தேர்வு செயல்முறை மற்றும் வெளி நபர் வாய்ப்பு

டாடா சன்ஸ் அமைப்பைக் கட்டுப்படுத்தும் முதன்மை அறக்கட்டளைகளில் ஒன்றான சர் தொரப்ஜி டாடா அறக்கட்டளை, சந்திரசேகரனுக்குப் பின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

டாடா குழுமத்தின் பாரம்பரியம் மற்றும் நீண்டகால நலன்களுக்கு ஏற்ப சீரான தலைமை மாற்றம் நடைபெறும் என அறக்கட்டளை அறிவித்துள்ளது.

அதேவேளையில், குழுமத்தின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான எதிர்கால முதலீட்டுத் திட்டங்களைச் திறம்பட வழிநடத்த தகுதியான வெளி நபர் ஒருவரைத் தலைவராக நியமிக்கும் வாய்ப்பையும் டாடா அறக்கட்டளை வாரியம் முற்றிலும் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT