LOADING...
செப்டம்பர் 1 முதல் வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் விதிமுறை அமல்; பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
செப்டம்பர் 1 முதல் வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் விதிமுறை அமல்

செப்டம்பர் 1 முதல் வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் விதிமுறை அமல்; பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2025
05:35 pm

செய்தி முன்னோட்டம்

தங்க நகைகளைப் போலவே வெள்ளி நகைகளின் தூய்மையையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு புதிய ஹால்மார்க் விதிமுறையை செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்குக் கொண்டுவரவுள்ளது. இந்த விதிமுறை தற்போது கட்டாயமாக்கப்படவில்லை. விருப்பத்தின் பேரில், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட அல்லது முத்திரையிடப்படாத வெள்ளி நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), வெள்ளி நகைகளின் தூய்மைக்காக 800, 835, 900, 925, 970 மற்றும் 990 என ஆறு புதிய தரநிலைகளை அமைத்துள்ளது. இனி, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஒவ்வொரு நகைக்கும் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளக் குறியீடு (HUID) இருக்கும். இந்த குறியீடு நகையின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மையை உடனடியாகத் தெரிந்துகொள்ள உதவும்.

அவசியம்

ஹால்மார்க் ஏன் அவசியம்?

ஹால்மார்க் என்பது ஒரு உலோகத்தின் தூய்மையை உறுதி செய்யும் சான்றாகும். பிஐஎஸ் ஆய்வகத்தில் நகைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு, இந்த முத்திரை இடப்படும். இந்த புதிய முறை, வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான தூய்மையுள்ள நகையைப் பெற உதவுகிறது. ஹால்மார்க் இல்லாத நகைகளில் கலப்படம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இனி HUID குறியீடு மற்றும் ஹால்மார்க் முத்திரையுடன் இந்த மோசடி வாய்ப்புகள் குறையும். இனி வாடிக்கையாளர்கள் பிஐஎஸ் கேர் ஆப் மூலம் நகையில் உள்ள HUID குறியீட்டைச் சரிபார்த்து, அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். இது, வாடிக்கையாளர்களின் வாங்குதலை மிகவும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றும்.