Loading...
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை; UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை; UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
11:24 am

செய்தி முன்னோட்டம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வாரம் யுபிஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது தற்காலிக சிரமத்தைச் சந்திக்க நேரிடலாம். வங்கியில் திட்டமிடப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக செப்டம்பர் 4 ஆம் தேதி நள்ளிரவில் 45 நிமிடங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் தற்காலிகமாக செயல்படாது என்று வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மாற்று வழிகள்

சேவை நிறுத்தப்படும் நேரம் மற்றும் மாற்று வழிகள்

செப்டம்பர் 4, 2026 அன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 00:15 மணி முதல் 01:00 மணி வரை எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்.

இருப்பினும், இந்த நேரத்தில் தடையற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் UPI Lite வசதியையோ அல்லது பிற வங்கி சேவைகளையோ பயன்படுத்துமாறு எஸ்பிஐ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடிவடையவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ வரம்புகள்

எஸ்பிஐ வங்கியின் தினசரி யுபிஐ வரம்புகள்

எஸ்பிஐ வங்கி தனது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பின்வரும் வரம்புகளை நிர்ணயித்துள்ளது:

நபர்களுக்கு இடையேயான (P2P) பரிவர்த்தனைகள்: ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் வரை மட்டுமே செய்ய முடியும்.

மொத்த தினசரி வரம்பு: P2P மற்றும் வணிகர்களுக்கான (P2M) பரிவர்த்தனைகள் சேர்த்து ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ₹1,00,000 வரை மட்டுமே அனுப்ப முடியும்.

காப்பீடு & பங்குச் சந்தை: காப்பீடு மற்றும் கேப்பிட்டல் மார்க்கெட் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ₹2,00,000 வரை அனுமதிக்கப்படுகிறது.

வரி மற்றும் கல்விக்கட்டணம்: ஐபிஓ (IPO), வரி செலுத்துதல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சமாக ₹5,00,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.

ADVERTISEMENT

யுபிஐ லைட்

யுபிஐ லைட் (UPI Lite) பயன்பாடும் அதன் விதிகளும்

சிறிய அளவிலான பரிவர்த்தனைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'UPI Lite' மூலம், பயனர்கள் PIN எண் எதுவும் உள்ளிடாமல் ஒரு முறைக்கு ₹1,000 வரை எளிதாக அனுப்ப முடியும்.

UPI Lite கணக்கில் அதிகபட்சமாக ₹5,000 வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

BHIM SBI Pay செயலியைப் பதிவிறக்கம் செய்து, UPI Lite பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் பணத்தைச் சேர்ப்பதன் மூலம் இந்த வசதியை உடனடியாக செயல்படுத்த முடியும்.

இந்த UPI Lite கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி எதுவும் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT