
ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் எலைட் கிளப்பில் நுழைந்தது SBI
செய்தி முன்னோட்டம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(SBI) சந்தை மூலதனம் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியதை அடுத்து, அது மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் 8.3% வரை ஏற்றம் கண்ட எஸ்பிஐ பங்குகள், மும்பை பங்குச் சந்தையில்(பிஎஸ்இ) அதிகபட்சமாக ₹900.15 ஐ எட்டியது.
2021ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் எஸ்பிஐயின் பங்குகள் இவ்வளவு உயர்ந்துள்ளன.
இது எஸ்பிஐ வங்கியின் சிறந்த செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் எஸ்பிஐயின் பங்கு விலைகள் 40% உயர்ந்துள்ளது.
இதற்கு முன் 6 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. எனவே, இந்த சந்தை மூலதன மைல்கல்லை எட்டிய மற்ற ஆறு இந்திய நிறுவனங்களுடன் எஸ்பிஐயும் தற்போது சேர்ந்துள்ளது.
இந்தியா
அரசாங்கத்துடன் தொடர்புடைய பங்குகள் உயரும் என கணிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய '₹8 டிரில்லியன் கிளப்'பில் தற்போது எஸ்பிஐயும் சேர்ந்துள்ளது.
பாஜக அரசாங்கத்திற்கு உறுதியான வெற்றி கிடைக்கும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுத்துறை யூனிட்(PSU) பங்குகள் இன்று திடீர் உயர்வை பதிவு செய்தன.
இந்நிலையில், எஸ்பிஐயும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய பங்குகள் தொடர்ந்து உயரும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.