LOADING...
அன்சோல்டு டூ சாம்பியன் கேப்டன்! ஆர்சிபிக்கு கோப்பை வென்று தந்த ரஜத் படிதார் ரோடோரிஸின் பிராண்ட் முகம் ஆனார்
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ரோடோரிஸ் பிராண்ட் அம்பாசிடராக நியமனம்

அன்சோல்டு டூ சாம்பியன் கேப்டன்! ஆர்சிபிக்கு கோப்பை வென்று தந்த ரஜத் படிதார் ரோடோரிஸின் பிராண்ட் முகம் ஆனார்

எழுதியவர் Sekar Chinnappan
May 21, 2026
05:43 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியாலும் வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, பின்னர் வெறும் 20 லட்ச ரூபாய்க்கு மாற்று வீரராக ஆர்சிபி அணிக்குள் நுழைந்தவர் ரஜத் படிதார். அதே சீசனில் பிளேஆஃப் சுற்றில் அதிரடி சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திருப்பிய அவர், கடந்த 2025 ஐபிஎல் தொடரில் 11 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால கோப்பைக் கனவைத் தங்களின் அசாத்திய கேப்டன்சியால் நனவாக்கி சாம்பியன் பட்டம் வென்று தந்த ரஜத் படிதார், தற்பொழுது இந்தியாவின் முதல் டிசைன்-லெட் மெக்கானிக்கல் வாட்ச் நிறுவனமான ரோடோரிஸ் பிராண்டின் 'ஏ ரோடோரிஸ் மேன்' (A ROTORIS Man) என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இந்திய வாட்ச் பிராண்ட்

213 ஸ்ட்ரைக் ரேட்டுடன் நடப்பு சாம்பியனாக மிரட்டும் படிதாருடன் கைகோர்த்த அதிநவீன இந்திய வாட்ச் பிராண்ட்

தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரிலும் நடப்பு சாம்பியன் கம்பீரத்துடன் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள ரஜத் படிதார், 213.46 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 21 பிரம்மாண்ட சிக்ஸர்களுடனும் மிரட்டி வருகிறார். இத்தகைய கடுமையான உழைப்பிற்கும், அசைக்க முடியாத பொறுமைக்கும் சான்றாக விளங்கும் படிதாரின் வாழ்க்கை ஆர்க், தங்களின் பிராண்ட் மதிப்புகளுடன் சரியாக ஒத்துப்போவதால் இந்த நீண்டகால கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாக ரோடோரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டிகள் வரை படிதார் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ரோடோரிஸ் கடிகாரங்களை அணிந்து வலம் வரவுள்ளார்.

ரஜத் படிதார் நெகிழ்ச்சி

"காலவரிசை எனது உழைப்பைத் தீர்மானிக்கவில்லை" — ரோடோரிஸ் ஒப்பந்தம் குறித்து ரஜத் படிதார் நெகிழ்ச்சி

இந்த வரலாற்றுப் பங்களிப்பு குறித்துப் பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், "கிரிக்கெட் விளையாட்டு எப்போதுமே என்னிடம் மிகுந்த பொறுமையைக் கோரியுள்ளது. எனது பயணத்தில் பல ஆண்டுகள் நிச்சயமற்ற தன்மைகளும், தாமதமான அங்கீகாரங்களும் மட்டுமே கிடைத்தன. ஆனால், அந்தத் காலவரிசை எனது கடின உழைப்பைத் தீர்மானிக்க நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. துல்லியத் தன்மையையும், பொறுமையையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ரோடோரிஸ் பிராண்டும் இதே கொள்கையைக் கொண்டுள்ளது. இது வெறும் கையில் கட்டும் கடிகாரம் அல்ல, இது நாம் இருவருமே எதை நோக்கி நிற்கிறோம் என்பதன் அடையாளம்." என்று மிகவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement