டிசம்பர் 31-க்கு பிறகு பழைய காசோலை புத்தகங்கள் செல்லாதா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
தற்போது புழக்கத்தில் உள்ள காசோலை புத்தகங்கள் (CTS Cheque Books) வரும் 2026 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிடும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்தது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காசோலைகள் 2027 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும், இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் உண்மைக்கு புறம்பானவை என்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
புதிய காசோலை தேவையில்லை
வாடிக்கையாளர்கள் புதிய காசோலை வாங்கத் தேவையில்லை
ரிசர்வ் வங்கி இதுகுறித்து மேலும் கூறுகையில், தற்சமயம் பயன்பாட்டில் உள்ள CTS காசோலை முறைகளில் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவரும் திட்டம் தங்களுக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய காசோலை புத்தகங்களை மாற்றவோ அல்லது புதிய புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவோ தேவையில்லை.
பொதுமக்களும் வங்கியாளர்களும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ஆர்பிஐ வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Embed
It has come to the notice of the Reserve Bank of India that a message is circulating on social media claiming that the standard Cheque Truncation System (CTS) cheque books currently in use will change from December 31, 2026 and the new cheque books featuring updated security… pic.twitter.com/jT1hHAM9QA
— ReserveBankOfIndia (@RBI) November 7, 2026
விரைவுபடுத்தும் முறை
காசோலை பரிவர்த்தனையை விரைவுபடுத்தும் CTS முறை
காசோலை பரிவர்த்தனை அமைப்பு (Cheque Truncation System - CTS) என்பது காகிதக் காசோலைகளை ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக்கு நேரில் எடுத்துச் செல்லாமல், டிஜிட்டல் படங்கள் மூலம் சரிபார்க்கும் தொழில்நுட்பமாகும்.
இந்த நவீன முறையானது காசோலைகள் பணமாக மாறுவதற்கான நேரத்தைக் குறைக்கவும், வங்கிப் பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தவும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்சமயம் இந்த கட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விதிகளின் படியே காசோலைகள் தொடர்ந்து செயல்படும்.