Page Loader
தனது நீண்ட கால துணைவரை மணந்தார் ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன் 

தனது நீண்ட கால துணைவரை மணந்தார் ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன் 

எழுதியவர் Sindhuja SM
Jan 12, 2024
12:03 pm

செய்தி முன்னோட்டம்

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நீண்ட கால துணைவரான ஆலிவர் முல்ஹெரினை ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தனது திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, ஒரு குறுஞ்செய்தி மூலம் NBC செய்தி நிறுவனத்திடம் சாம் ஆல்ட்மேன் தனது திருமணத்தை உறுதிப்படுத்தினார். தம்பதியினரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழாவில் ஆல்ட்மேன் மற்றும் முல்ஹெரின் ஆகியோர் திருமண உறுதிமொழிகளை பரிமாறிக் கொள்வதை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் காண முடிகிறது. சாம் ஆல்ட்மேனின் துணைவர் ஆலிவர் முல்ஹரின் ஒரு ஆஸ்திரேலிய மென்பொருள் பொறியாளர் ஆவார்.

ட்ஜ்வ்ங்க

விரைவில் குழந்தைகளைப் பெற விரும்பும் புது மண தம்பதியினர் 

கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், தானும் முல்ஹெரினும் விரைவில் குழந்தைகளைப் பெற விரும்புவதாக சாம் ஆல்ட்மேன் கூறியிருந்தார். அது தவிர, அவர்களது உறவு குறித்து அவர் வெளிப்படையாக எந்த சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டதில்லை. இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கிய வெள்ளை மாளிகை அரசு விருந்தில் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆலிவர் முல்ஹெரின் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்த வருடம் சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ-யின் CEO பதவியிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அதன் பிறகு, ChatGPt ஸ்டாருடன் உடன்பாட்டை எட்டிய பின்னர் ஐந்து நாட்களில் மீண்டும் அதே நிறுவனத்தில் CEOவாக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.