Loading...
நவம்பர் 2026 முக்கிய நிதி மாற்றங்கள்: ஐடிஆர், ஓய்வூதியம், ஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிபி அப்டேட்ஸ்
நவம்பர் 2026 முக்கிய நிதி மாற்றங்கள்

நவம்பர் 2026 முக்கிய நிதி மாற்றங்கள்: ஐடிஆர், ஓய்வூதியம், ஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிபி அப்டேட்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
04:57 pm

செய்தி முன்னோட்டம்

நவம்பர் 2026 தொடங்கும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த நிதி மற்றும் வரி விதிப்பு முறைகளில் பல முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. ஓய்வூதியதாரர்களின் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பு, வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்) செய்ய நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, புதிய ஜிஎஸ்டி விதிகள் மற்றும் சவரன் கோல்ட் பாண்ட் (எஸ்ஜிபி) மீட்பு என சாமானிய மக்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரும் அறிய வேண்டிய முக்கிய நிதி அப்டேட்கள் இதோ:-

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க நவம்பர் 30 கடைசி நாள்

அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத் தொகை எந்தவிதத் தடங்கலும் இன்றி தொடர்ந்து கிடைக்க, தங்களது வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அக்டோபர் 1 முதல் இந்த சேவை தொடங்கப்பட்ட நிலையில், பிற ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1 முதல் ஆன்லைன் மற்றும் வங்கி வாயிலாக இந்த சேவை தொடங்குகிறது.

வங்கிக் கிளைகள், ஜீவன் பிரமாண் தளம் அல்லது அஞ்சல் துறை சேவை மூலம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஐடிஆர் காலக்கெடு

கணக்குத் தணிக்கை வரி செலுத்துவோருக்கு ஐடிஆர் காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரித்துறை, கணக்குத் தணிக்கைக்கு உட்பட்ட தகுதியுள்ள வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு 2026-27 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடைவை நீட்டித்துள்ளது.

இதன்படி அக்டோபர் 31 ஆக இருந்த கடைசி தேதி, தற்போது நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சாதாரண தனிநபர் வரி செலுத்துவோருக்கு இக்காலக்கெடு நீட்டிப்பு பொருந்தாது என்பதால் தவறியவர்கள் தாமதக் கட்டணத்துடன் டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யலாம்.

ADVERTISEMENT

ஜிஎஸ்டி

வர்த்தகர்களுக்குப் பயன் தரும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்

மத்திய அரசு அக்டோபர் 26 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிஎஸ்டி விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

இதன்படி விற்பனைக்கு பிந்தைய தள்ளுபடிகள் தொடர்பான கணக்கீடுகள் எளிமையாக்கப்பட்டு, வணிகங்களின் வரி இணக்கம் சீராக்கப்படுகிறது.

மேலும், மூலப்பொருட்களின் வரி விகிதம் அதிகமாக இருக்கும் தலைகீழ் வரி கட்டமைப்பில் (Inverted duty structure) இயங்கும் வணிகங்களுக்கு தற்காலிக வரி ரீஃபண்ட் அதிவேகமாக வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

சவரன் கோல்ட் பாண்ட்

சவரன் கோல்ட் பாண்ட் மீட்பு மற்றும் எஃப்டி வட்டி விகிதங்கள்

சவரன் கோல்ட் பாண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்தில் 2020-21 சீரிஸ் II, VIII மற்றும் 2021-22 சீரிஸ் I, VII ஆகிய நான்கு தவணைகளை முன்கூட்டியே மீட்டுக்கொள்ள வாய்ப்பு பெறுகின்றனர்.

அதேபோல், ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்டி) திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பல்வேறு வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை நவம்பரில் திருத்தியமைக்க உள்ளதால் அவற்றை ஒப்பீடு செய்து முதலீடு செய்வது நல்லது.

இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களின் நிதித் திட்டமிடலை சரியாக மேற்கொள்ள முடியும்.

ADVERTISEMENT