NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள்
    மனைவி நீட்டா, குழந்தைகள் ஆகாஷ், ஈஷா மற்றும் அனந்துடன் முகேஷ் அம்பானி

    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 27, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் முகேஷ் அம்பானியின் மூன்று குழந்தைகளுக்கும் சம்பளம் இல்லையாம்.

    இவர்களின் தந்தையான 66 வயதான முகேஷ் அம்பானியும், 2020-21 நிதியாண்டு முதல் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவரது மூன்று குழந்தைகள்- இரட்டையர்களான ஆகாஷ் மற்றும் இஷா (இருவரும் 31) மற்றும் ஆனந்த் (28 வயது) - இவர்களுக்கு சம்பளமின்றி, வாரியம் மற்றும் கமிட்டி கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என்று நிறுவனம் ஒரு தீர்மானத்தில் கூறியுள்ளது.

    அதனுடன் நிறுவனம் ஈட்டிய லாபத்தில் கமிஷன் மட்டுமே பெறுவார்கள்.

    எனினும் அவரது உறவினர்கள் நிகில் மற்றும் ஹிடல் உள்ளிட்ட மற்ற நிர்வாக இயக்குநர்களுக்கு சம்பளம், சலுகைகள் மற்றும் கமிஷன் வழங்கப்படுகிறது.

    card 2

    2029 வரை சம்பளமின்றி வேலை பார்க்கவுள்ள முகேஷ் அம்பானி

    வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்நிறுவனத்தின் தலைவராக அதலைவராக 2029 வரை தொடர, ஒப்புதல் அளித்தனர்.

    இந்தக் காலக்கட்டத்திலும் சம்பளமின்றி வேலை பார்க்க அவர் முடிவெடுத்து அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்ற மாற்றங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

    இஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடெய்லின் விரிவாக்கத்தில், சில முக்கிய கையகப்படுத்துதல் மற்றும் 'இண்டிபெண்டன்ஸ்' பிராண்டை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் தொடருவார்.

    ஆகாஷ் அம்பானி, ஜியோவில், 5ஜி, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற புதிய கால தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கு அவர் தலைமை தாங்குகிறார்.

    ஆனந்த், ரிலையன்ஸின் எரிசக்தி மற்றும் பொருள் வணிகங்களின் விரிவாக்கம் போன்ற உலகளாவிய செயல்பாடுகளை பார்வையிடுகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிலையன்ஸ்

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! குளிர்கால பராமரிப்பு
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025