நாராயண மூர்த்தியின் 5 மாத பேரனுக்கு ரூ.4.2 கோடி டிவிடெண்ட் வருமானம்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்தார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸில் தற்போது ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு 0.04% பங்குகள் உள்ளன.
இந்நிலையில், அந்த பங்குகளில் இருந்து கிடைத்த டிவிடெண்ட் வருமானம் ரூ.4.2 கோடி தற்போது அவரது பேரனுக்கு கிடைத்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்று அதன் Q4 எண்களை அறிவித்த பிறகு, இறுதி டிவிடெண்ட் ரூ.20 மற்றும் ரூ.8 சிறப்பு டிவிடெண்ட் உட்பட மொத்தம் ரூ.28 டிவிடெண்ட்டையும் அறிவித்தது.
இன்ஃபோசிஸ்
ஜூலை 1 ஆம் தேதி டிவிடெண்ட் பணம் பங்குதரர்களுக்கு செலுத்தப்படும்
இறுதி டிவிடெண்ட் மற்றும் சிறப்பு டிவிடெண்ட் தொகையை மே 31 ஆம் தேதி நிறுவனம் இறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி டிவிடெண்ட் பணம் பங்குதரர்களுக்கு செலுத்தப்படும் என்று அது மேலும் கூறியுள்ளது.
நவம்பர் 2023இல், நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு மகன் பிறந்திருப்பதாக அறிவித்தனர்.
ஏகாக்ரா என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானதாகும். அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதியை இந்த பெயர் குறிக்கிறது. ஏகாக்ரா, நாராயண மூர்த்தியின் மூன்றாவது பேரக்குழந்தை ஆவார். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மூலம் அவருக்கு ஏற்கனவே இரண்டு பேத்திகளும் உள்ளனர்.