NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

    ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2024
    05:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்துள்ளார்.

    இதனால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் தனிப்பட்ட பங்குகள் 0.40% இல் இருந்து 0.36% ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸில் தற்போது ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு 0.04% பங்குகள் உள்ளன.

    இதனையடுத்து, நாராயண மூர்த்தியின் பேரனான ஏகாக்ரா இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நவம்பர் 2023இல், நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு மகன் பிறந்திருப்பதாக அறிவித்தனர்.

    இன்ஃபோசிஸ் 

    நாராயண மூர்த்தியின் பேரன் பேத்திகள் 

    ஏகாக்ரா என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானதாகும். அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதியை இந்த பெயர் குறிக்கிறது.

    ஏகாக்ரா, நாராயண மூர்த்தியின் மூன்றாவது பேரக்குழந்தை ஆவார்.

    நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மூலம் அவருக்கு ஏற்கனவே இரண்டு பேத்திகளும் உள்ளனர்.

    இதற்கிடையில், நாராயண மூர்த்தியின் மனைவியும், ஏகாக்ராவின் பாட்டியுமான சுதா மூர்த்தி சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்றார்.

    சமூகப் பணி, பரோபகாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாக சர்வதேச மகளிர் தினத்தன்று சுதா மூர்த்தியின் நியமனத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ஃபோசிஸ் அறக்கட்டளையை வழிநடத்திய சுதா மூர்த்தி, 2021 டிசம்பரில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஃபோசிஸ்
    நாராயண மூர்த்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இன்ஃபோசிஸ்

    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி
    விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு!  கூகுள்
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி

    நாராயண மூர்த்தி

    வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர் இன்ஃபோசிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025