வாரம் 70 மணி நேர வேலை என்பது தவறில்லை, ஆனால் ஒரு தேர்வு: தெளிவுபடுத்திய இன்போசிஸ் நாராயண மூர்த்தி
செய்தி முன்னோட்டம்
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி திங்கள்கிழமை தனது 70 மணிநேர வேலை வாரக் கருத்தைப் பற்றி தெளிவுபடுத்தினார்.
அதை யாரும் வலுக்கட்டாயமாக மற்றவர்கள் மீது செயல்படுத்த முடியாது என்று அவர் உறுதிபட கூறினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இளம் இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று அவர் கூறிய கருத்து சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தைத் தூண்டியது.
அதன் பின்னர், தற்போது IMC இன் கிலாசந்த் நினைவு விரிவுரையில் நாராயண மூர்த்தி இந்த தெளிவுபடுத்தலை வெளியிட்டார்.
"நீங்கள் இதைச் செய்ய வேண்டும், நீங்கள் இதைச் செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது" என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் அப்போது கூறினார்.
பணி நேரம்
"விவாதிக்க வேண்டிய விஷயங்கள் அல்ல"
அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை கட்டியமைத்த ஆண்டுகளில் தனது அலுவலகத்தில் செலவழித்த நேரத்தைப் பகிர்ந்துகொண்ட அவர்,"நான் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்று இரவு 8:30 மணிக்குப் புறப்பட்டேன். 40 ஆண்டுகளாக அதைச் செய்தேன். அது உண்மை. அதனால் யாரும் தவறு என்று சொல்ல முடியாது".
பணி நேரங்கள் குறித்த தேர்வுகள் தனிப்பட்டவை என்றும், பொது விவாதத்திற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இவையெல்லாம் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் அல்ல. ஒருவர் சுயபரிசோதனை செய்து, உள்வாங்கக் கூடிய, ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம்" என்றார் மூர்த்தி.
எல்&டி தலைவர் கருத்து
90 மணி நேர வேலை பரிந்துரைத்த (எல்&டி) தலைவர்
சமீபத்தில் லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் 90 மணி நேர வேலை வாரத்திற்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
எல்&டி தலைவரின் கருத்து குறித்து பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ், "மேலிருந்து தொடங்கட்டும், [அது வேலை] கருத்தின் சான்றாக இருந்தால், அதை மேலும் கீழும் செயல்படுத்துங்கள்" என்றார். வேலை நேரத்தை அளவிடும் நடைமுறையை "தொன்மையான மற்றும் பிற்போக்குத்தனம்" என்றும் அவர் அழைத்தார்.
அந்த கருத்துக்களால் உண்டான எதிர்மறை கருத்துக்கள் தேசிய விவாதத்தின் தலைப்பாக மாறியது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நாராயணமூர்த்தியின் விளக்கம் வந்துள்ளது.