இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது MakeMyTrip; செபி ஒப்புதல்; ஐபிஓ முக்கிய விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
பிரபல ஆன்லைன் பயண முன்பதிவு நிறுவனமான மேக்மைட்ரிப் (MakeMyTrip), தனது இந்திய துணை நிறுவனமான மேக்மைட்ரிப் (இந்தியா) லிமிடெட் (MMT India) மூலம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம் ரகசிய முறையில் வரைவுப் பத்திரங்களை சமர்ப்பித்திருந்தது. கோப்புகளை விரிவாக ஆய்வு செய்த இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), நவம்பர் 6-ல் தனது இறுதி அவதானிப்புக் குறிப்புகளை வெளியிட்டு ஐபிஓ பாதைக்கு அனுமதி அளித்துள்ளது.
பங்குகள் விற்பனை
பங்குகள் விற்பனை வடிவம் மற்றும் தாய் நிறுவனக் கட்டுப்பாடு
பொது வெளியீடு முழுமையாகப் பங்குகள் விற்பனை (Offer for Sale) வடிவில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்மைட்ரிப் தாய் நிறுவனம் மற்றும் அதன் முழுமையான சிங்கப்பூர் துணை நிறுவனமான ஐபிபோ குரூப் தங்களின் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்கின்றன.
இருப்பினும் ஐபிஓ வெளியீட்டிற்குப் பிறகும் MMT India மேக்மைட்ரிப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என்றும், அதன் நிதிக் கணக்குகள் தாய் நிறுவனத்துடன் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஐபிஓ நோக்கம்
ஐபிஓ வெளியீட்டின் பிரதான நோக்கம் மற்றும் நிதிப் பயன்பாடு
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதன் மூலம் இந்தியாவில் பிராண்ட் முகவரியை மேலும் வலுப்படுத்த முடியும் என மேக்மைட்ரிப் நம்புகிறது.
மேலும் தொழில்நுட்பத் துறையில் புதிய திறமையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இப் நடவடிக்கை பெரிதும் உதவும்.
இந்த பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி தாய் நிறுவனத்தின் கையிருப்பை வலுப்படுத்தவும், பிற நிறுவனங்களைக் கைப்பற்றுதல் மற்றும் பங்குகளின் மறுகொள்முதல் போன்ற எதிர்கால வணிக வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
வலுவான நிதி நிலைமை
இரண்டாம் காலாண்டில் ஈட்டிய வலுவான நிதி நிலைமை
சமீபத்தில் வெளியான 2026-27 நிதியாண்டின் செப்டம்பருடன் முடிந்த இரண்டாம் காலாண்டில் மேக்மைட்ரிப் நிறுவனம் $1.8 மில்லியன் நிகர லாபத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு வருவாய் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தற்சமயம் செபியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, MMT India விரைவில் தனது இறுதி சிவப்பு ஹெர்ரிங் விருப்பறிக்கையை (RHP) தாக்கல் செய்து பங்குகளின் விலை வரம்பு மற்றும் ஏலத் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.