பெங்களூரில் உள்ள லிங்க்ட்இன் அலுவலகத்தின் மீட்டிங் அறைகளுக்கு வினோத பெயர்கள்! காண்க!
லிங்க்ட்இன் இந்தியாவின் ஊழியர் ஒருவர், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தின் உட்புறத்தின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், லிங்க்ட்இன் அலுவலகத்தில் இந்திய பரபரிய ஸ்வீட்களின் பெயர் கொண்ட மீட்டிங் அறைகள் உள்ளன என்பது தான் இணையத்தினரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ரவுனக் ராம்தேகே என்ற நபர் பெங்களூரில் உள்ள லிங்க்ட்இன் அலுவலகத்தை சுற்றிப்பார்த்து, அது பற்றி இன்ஸ்டாகிராமில் மூன்று கிளிப்களை பகிர்ந்துள்ளார். அதில் பிரமாண்டமான கேஃபெ தவிர, வளாகத்தில் கேமிங், இசை மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றிற்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2003இல் தொடங்கப்பட்ட, லிங்க்ட்இன், இணையதளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகள் மூலம் செயல்படும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சமூக ஊடக தளமாகும்.