NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி /  சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு முடிவுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
     சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு முடிவுகள்
    காலாண்டு முடிவுகளை வெளியிட்டது கோடக் மஹிந்திரா வங்கி

     சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு முடிவுகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 23, 2023
    09:11 am

    செய்தி முன்னோட்டம்

    2023-24 நிதியாண்டில், ஜூன் 30ல் முடிவடைந்த முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் தனியார் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கி.

    சந்தை வல்லுனர்களின் கணிப்பைப் பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், அதனைக் கடந்து நல்ல காலாண்டு முடிவுகளையே பதிவு செய்திருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி.

    இந்த காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு மும்பையில் நடைபெற்ற அவ்வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, நேற்று தங்கள் காலாண்டு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி.

    கடந்த நிதியாண்டு முதல் காலாண்டில், ரூ.2071 கோடி நிகர லாபத்தை அந்நிறுவனம் பதிவு செய்திருந்த நிலையில், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 67% அதிகமாக, ரூ.3,452 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருக்கிறது அவ்வங்கி.

    வணிகம்

    கோடக் மஹிந்திரா வங்கி: காலாண்டு முடிவுகள் 

    அவ்வங்கியின் நிகர வட்டி வருவாயானது, கடந்த நிதியாண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 33% அதிகரித்து, ரூ.6,234 கோடியாக பதிவு செய்திருக்கிறது. முதல் காலாண்டின் நிகர வட்டி வரம்பானது 5.57% எனக் குறிப்பிட்டிருக்கிறது கோடக் மஹிந்திரா.

    சராசரி நடப்புக் கணக்கு வைப்புத் தொகையானது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 8% அதிகரித்து ரூ.59,431 கோடியாக அதிகரித்திருக்கிறது.

    அதேபோல், சராசரி சேமிப்புக் கணக்கு வைப்புத் தொகையானது, ஜூன் 30 வரை ரூ.1,19,817 கோடியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி.

    மேலும், அவ்வங்கியின் செயல்பாட்டு வருவாயாது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 78% அதிகரித்து ரூ.4,950 கோடியாக உயர்ந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    காலாண்டு முடிவுகள்
    காலாண்டு

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4 தங்கம் வெள்ளி விலை
    ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு  இந்தியா
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட் ஃப்ளிப்கார்ட்

    காலாண்டு முடிவுகள்

    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை
    சிறந்த காலாண்டு முடிவுகளை பதிவு செய்த HCL  டிவிடெண்ட்
    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்!  பங்குச் சந்தை

    காலாண்டு

    ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா.. முன்னேறும் இந்திய நிறுவனங்கள்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025