Page Loader
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய இந்திய அரசு
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய இந்திய அரசு

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய இந்திய அரசு

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 30, 2023
12:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் இரண்டு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் உயர்த்தி அறிவித்திருக்கிறது இந்திய அரசு. அதன்படி, மூன்று ஆண்டுகள் வரையிலான கால வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரித்து 7.1 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சுகன்ய சம்ரிதி திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டி விகிதத்தில் 20 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரித்து, 8.2 சதவிகிதமாக அறிவித்திருக்கிறது இந்திய அரசு. இந்த சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை தொடர்ந்து ஆறாவது காலாண்டாக இந்திய அரசு உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம்

பிற திட்டங்களுக்கான வட்டி விகிதம்: 

மேற்கூறிய இரண்டு சிறுசேமிப்புத் திட்டங்களைத் தவிர்த்துப், பிற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதமானது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வழங்கப்பட்ட அதே அளவே தொடரவிருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கான வட்டி விகிதமானது நிலையாக 7.1% ஆகவே இருக்கிறது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை இந்திய அரசு மறுசீரமைப்பு செய்வது வழக்கம். சந்தையில் உள்ள அரசின் கடன் பத்திர வரவுக்கு ஏற்ப, சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசு மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.