LOADING...
இண்டிகோ விமானச் சேவை குழப்பம்: பணம் திரும்ப பெறுவது எப்படி? பயணிகள் அறிய வேண்டிய உரிமைகள்!
இந்த பிரச்னையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இண்டிகோ விமானச் சேவை குழப்பம்: பணம் திரும்ப பெறுவது எப்படி? பயணிகள் அறிய வேண்டிய உரிமைகள்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 05, 2025
05:14 pm

செய்தி முன்னோட்டம்

விமானிகளின் கடமை நேர வரம்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களால், இண்டிகோ கடந்த சில நாட்களாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்து, நாடு முழுவதும் பெரும் நிதி மற்றும் பயணக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

நடவடிக்கை

அரசின் தற்காலிக நடவடிக்கை

விமானிகளின் கடமை நேரத்தைக் கட்டுப்படுத்தும் புதிய FDTL விதிமுறைகளை செயல்படுத்தும் காலக்கெடுவை அரசு தற்போது பகுதியளவில் திரும்பப் பெற்றுள்ளது. இந்த தளர்வு, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுவதே இதன் நோக்கமாகும்.

இழப்பீடு

பயணிகள் அறிய வேண்டிய உரிமைகள்

விமான ரத்து அல்லது தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், DGCA விதிமுறைகளின்படி, இழப்பீடு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு உரிமை உண்டு. 1. விமானம் ரத்து: விமானம் ரத்து செய்யப்பட்டால், பயணிகள் செலுத்திய முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம், அல்லது கட்டணம் இல்லாமல் வேறு ஒரு விமானத்தில் பயணிக்க மாற்று ஏற்பாடு செய்யுமாறு கோரலாம். 2. நீண்ட தாமதம்: விமானம் புறப்படுவதற்கு நீண்ட கால தாமதம் ஏற்பட்டால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை விமான நிறுவனம் வழங்க வேண்டும். 3. முன் அறிவிப்பு இல்லாமை: பயணிகளுக்கு முறையான முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் இழப்பீட்டுக் தொகையைப் பெறுவதற்கும் சட்டப்படி உரிமை உண்டு.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

சலுகைகள்

இண்டிகோ அளிக்கும் பயணிகளுக்கான முக்கிய சலுகைகள்

சில சலுகைகளையும், இழப்பீடுகளையும் வழங்குவதாக IndiGo அறிவித்துள்ளது. டிசம்பர் 5-இல் இருந்து 15-ஆம் தேதி வரையில் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும். அதன்படி, ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை எந்தவிதக் கழிவும் இன்றி முழுமையாகப் பயணிகள் திரும்பப் பெறலாம். பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று தேதியில் அல்லது வேறு ஒரு விமானத்தில் பயணிக்க விரும்பினால், Cancellation Fee, Rebooking Fee ஏதும் வசூலிக்கப்படாது. விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் விமான நிறுவனம் சார்பில் வழங்கப்படும். விமான ரத்து அல்லது தாமதம் காரணமாக, பயணிகள் இரவு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தங்கும் விடுதி வசதியை இண்டிகோ ஏற்பாடு செய்து தரும்.

Advertisement