
இந்தியாவில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் அதிகரிப்பு; டிராய் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மொபைல் மற்றும் 5ஜி நிலையான வயர்லெஸ் அணுகல் (FWA) உட்பட, ஜூலை 2025 நிலவரப்படி 1,17.191 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 0.09% என்ற குறைந்த மாதாந்திர வளர்ச்சியை இது காட்டுகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், நகர்ப்புற வயர்லெஸ் சந்தாதாரர்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். நகரங்களில் 31.6 லட்சம் புதிய பயனர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் நகர்ப்புற சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 6.41 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, கிராமப்புற வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 21.2 லட்சம் குறைந்து, 5.30 கோடியாக உள்ளது.
டெலி-டென்சிட்டி
சீரற்ற டெலி-டென்சிட்டி வளர்ச்சி
மொத்த டெலி-டென்சிட்டி (100 பேருக்கு எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன) சற்று அதிகரித்து 82.75% ஆக உள்ளது. எனினும் இந்த வளர்ச்சி சீரற்றதாகவே உள்ளது. நகர்ப்புற டெலி-டென்சிட்டி அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புற டெலி-டென்சிட்டி குறைந்துள்ளது. சேவை வழங்குநர்களைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 49.85 கோடி சந்தாதாரர்களுடன் தனது தலைமை இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பாரதி ஏர்டெல் 30.70 கோடி சந்தாதாரர்களுடன் இரண்டாம் இடத்திலும், வோடபோன் ஐடியா 12.75 கோடி சந்தாதாரர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. முதல் ஐந்து பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் மொத்தமாக 98.5% சந்தைப்பங்கைக் கொண்டுள்ளனர்.