Loading...
கொள்கை முடிவில் இருந்து தயாரிப்பு நிலைக்கு..! $20 பில்லியன் முதலீடு, 12 யூனிட்களுடன் இந்தியாவில் களமிறங்கும் 'செமிகான் 2.0'
$20 பில்லியன் முதலீட்டில் இந்தியாவில் சிப் தயாரிப்புத் தொடக்கம்

கொள்கை முடிவில் இருந்து தயாரிப்பு நிலைக்கு..! $20 பில்லியன் முதலீடு, 12 யூனிட்களுடன் இந்தியாவில் களமிறங்கும் 'செமிகான் 2.0'

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
03:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் தனது திட்டமிடுதல் கட்டத்தைக் கடந்து, நேரடி செயல்பாட்டு மற்றும் உற்பத்தி நிலைக்கு வெற்றிகரமாக உருவெடுத்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 செமிகண்டக்டர் யூனிட்கள் மூலம் சுமார் ரூ.1.6 லட்சம் கோடி ($20 பில்லியன்) முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 3 செமிகண்டக்டர் உற்பத்தி மையங்கள் ஏற்கனவே தங்களது செயல்பாட்டைத் தொடங்கி, உள்நாட்டு சிப் தயாரிப்பில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளன.

செமிகான் 2.0

ரூ.1.27 லட்சம் கோடியில் 'செமிகான் 2.0' விரிவாக்கம்

உற்பத்தி அலகுகளைத் தாண்டி, ஒட்டுமொத்த செமிகண்டக்டர் ஈக்கோசிஸ்டத்தையும் உருவாக்கும் நோக்கில் 'செமிகான் 2.0' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம் வெறும் சிப் தயாரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், பின்வரும் முக்கியப் பிரிவுகளில் கவனம் செலுத்தும்:

சிப் வடிவமைப்பு: உள்நாட்டுத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் வடிவமைப்பு மையங்கள்.

உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள்: சிப் தயாரிப்பிற்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள் மற்றும் தாதுப் பொருட்கள்.

ATMP / OSAT பேக்கேஜிங்: சிப் தயாரிப்புக்குப் பிந்தைய சோதனை மற்றும் தொகுப்பு அலகுகள்.

ஆராய்ச்சி & திறன்பாடு: ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பயிற்சி பெற்ற திறமையான பணியாளர்களை உருவாக்குதல்.

தற்போதைய நகர்வு

கடந்த காலப் பாடங்களும் தற்போதைய நகர்வும்

கடந்த காலங்களில் இந்தியாவில் சிப் தயாரிப்பு முயற்சிகளில் ஏற்பட்ட சவால்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தற்போதைய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கடந்த 2005 ஆம் ஆண்டில் ஏஎம்டி நிறுவனத்தின் $3 பில்லியன் முதலீட்டு திட்டம் கொள்கை மற்றும் செயலாக்க சிக்கல்களால் தடைபட்டதை சுட்டிக்காட்டிய அவர், 2022க்குப் பிறகான புதிய அணுகுமுறை கொள்கை ஸ்திரத்தன்மை, நிதி ஆதரவு மற்றும் விரைவான செயலாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார்.

ADVERTISEMENT

புதிய மைல்கல்

தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் புதிய மைல்கல்

இந்த வலுவான செமிகண்டக்டர் கட்டமைப்பு, இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள், ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு, பாதுகாப்புத் துறை மற்றும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகளுக்குத் தேவையான பாகங்களை உள்நாட்டிலேயே தடையின்றி பெற உதவும்.

இறக்குமதியைக் குறைத்து, உலகளாவிய குறைக்கடத்தி விநியோக சங்கிலியில் இந்தியாவை ஒரு தவிர்க்க முடியாத மையமாக மாற்றுவதே செமிகான் 2.0 திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

ADVERTISEMENT