Page Loader
இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி
இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி

இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 01, 2023
09:28 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7.6% அதிகரித்திருப்பதாக இந்திய அரசு நேற்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அந்தக் குறிப்பிட்ட காலாண்டிற்காக ரிசர்வ் வங்கி கணக்கிட்டதைவிட 1.1% அதிகமாகும். மேற்கூறிய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.5% வளர்ச்சி காணும் என முன்னர் கணித்திருந்தது ரிசர்வ் வங்கி. 2022ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.4% மட்டுமே அதிகரித்திருந்தது. எனவே, தற்போது எதிர்பார்ப்பை விட கூடுதலான வளர்ச்சி கிட்டியிருப்பது ஒருவகையில் இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா

அதிகரித்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி: 

மேற்குறிப்பிட்ட இரண்டாம் காலாண்டில் (Q2) இந்தியவில் சேவைத் துறையின் வளர்ச்சி குறைந்திருந்தாலும், அரசின் மூலதன செலவின உயர்வு மற்றும் அதிகரித்த தயாரிப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்திருக்கிறது. உலகளவில் பொருளாதார சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இந்திய அரசின் செலவினங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை ஆகிய காரணங்களால் இந்திய பொருளாதாரம் சற்று நிலையாகவே இருக்கிறது. இந்த ஆண்டு முதல் பாதியில் மட்டும் அரசின் மூலதன செலவுகள் ரூ.4.91 லட்சம் கோடியை எட்டியிருக்கின்றன. இதுவே, கடந்த 2022ம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.3.43 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.