LOADING...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு; தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு; தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 19, 2025
07:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று (டிசம்பர் 19) வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வலிமையையும், உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களைக் கையாளும் திறனையும் காட்டுகிறது.

கையிருப்பு

கையிருப்பு உயர்வு குறித்தத் துல்லியமானத் தரவுகள்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 1.689 பில்லியன் டாலர் (சுமார் ₹14,000 கோடி) அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த கையிருப்பு மதிப்பு 688.949 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக அந்நியச் செலாவணி சொத்துக்கள் 906 மில்லியன் டாலர் உயர்ந்து 557.787 பில்லியன் டாலராக உள்ளது. இது டாலர் அல்லாத பிற நாணயங்களான யூரோ, பவுண்ட் ஆகியவற்றின் மதிப்பை உள்ளடக்கியது. தங்கத்தின் மதிப்பு உயர்ந்ததால், இதன் இருப்பு 758 மில்லியன் டாலர் அதிகரித்து 107.741 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 14 மில்லியன் டாலர் அதிகரித்து 18.745 பில்லியன் டாலராக உள்ளது.

முக்கியத்துவம்

பொருளாதார முக்கியத்துவம்

சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் இருப்பு நிலை 11 மில்லியன் டாலர் உயர்ந்து 4.686 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப்டம்பர் 2024 இல் எட்டிய அதன் உச்சபட்ச அளவான 704.89 பில்லியன் டாலருக்கு மிக நெருக்கமாக தற்போது உள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய வலுவானக் கையிருப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் பெரும் சரிவைத் தடுக்கவும், இறக்குமதிச் செலவுகளை (சுமார் 11 மாதங்களுக்குத் தேவையான அளவு) ஈடுகட்டவும் உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement