LOADING...
இனி தங்கம் வாங்குவது சுலபம்; 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரம்
9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரம்

இனி தங்கம் வாங்குவது சுலபம்; 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2025
12:14 pm

செய்தி முன்னோட்டம்

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்களும் நகை வாங்கும் வகையில், 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் அங்கீகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு வழங்கியது. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய விதிமுறை ஜூன் 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) விதிமுறைகளின் கீழ், 9 காரட் தங்கம் இனி குறைந்தபட்சம் ஆயிரம் பாகங்களுக்கு 375 பாகங்கள் என்ற தூய்மையுடன் இருக்க வேண்டும். இந்த அங்கீகாரம், குறைந்த காரட் நகைகளுக்கும் ஹால்மார்க் தரத்தை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர் நம்பிக்கையைப் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரைகள்

தற்போது வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரைகள்

தற்போது, ஹால்மார்க் முத்திரை 24 காரட், 23 காரட், 22 காரட், 20 காரட், 18 காரட், மற்றும் 14 காரட் தங்க நகைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 9 காரட் தங்கமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ₹38,110 (10 கிராமுக்கு) என்ற குறைவான விலையில் நகைகளை வாங்க முடியும். சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணங்களால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, 24 கேரட் 10 கிராம் பவுன் ₹80,000ஐ தாண்டியுள்ளது. இதனால், நுகர்வோர் நகைகள் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், 9 காரட் தங்கத்திற்கு ஹால்மார்க் அங்கீகாரம் அளிப்பது, குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு நகைகள் வாங்குவதை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.