Loading...
2036க்குள் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்! இந்தியாவிற்கு தேவையான 20 சீர்திருத்தங்கள்
2036க்குள் $20 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு தேவையான 20 சீர்திருத்தங்கள்

2036க்குள் 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்! இந்தியாவிற்கு தேவையான 20 சீர்திருத்தங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 20, 2026
03:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பொருளாதாரம் 2036 ஆம் ஆண்டிற்குள் 20 டிரில்லியன் டாலர் எனும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளதாக உள்நாட்டுத் தரகு நிறுவனமான ஈக்விரஸ் தனது புதிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போதைய $3.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை சுமார் 5.5 மடங்கு உயர்த்த தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அவசியமாகும். இதற்கு நாட்டின் ரூபாய் மதிப்பு அடிப்படையிலான வளர்ச்சி தற்போதைய 10.5 சதவீதத்திலிருந்து 14.2 சதவீதமாக உயர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனாவின் வளர்ச்சிப் பாதை இந்தியாவின் இலக்கிற்கு சான்று

சீனா தனது பொருளாதாரத்தைத் திறந்துவிட்டு அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்த வரலாற்று சம்பவத்தை இந்தியா ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என ஈக்விரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா தனது $1.7 டிரில்லியன் டாலர் ஜிடிபியிலிருந்து தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஆண்டிற்கு 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்தது.

அதேபோன்று இந்தியாவும் உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் உற்பத்தித் திறனை ஒருங்கிணைத்து சீர்திருத்தங்களை செயல்படுத்தினால் இந்த பிரம்மாண்ட இலக்கை நிச்சயம் எட்ட முடியும்.

சேவைத் துறை

பொருளாதாரத்தை உயர்த்தும் சேவைத் துறையின் பங்களிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறை மிக முக்கியக் காரணியாக விளங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய 54 சதவீத ஜிடிபி பங்களிப்பை 65 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இவ்வறிக்கை கூறுகிறது.

நாட்டின் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்துவதன் மூலம் 2.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

மேலும், சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் $21 பில்லியன் டாலர் கூடுதல் அந்நிய செலாவணியைப் பெற முடியும்.

ADVERTISEMENT

20 சீர்திருத்தங்கள்

20 டிரில்லியன் டாலர் இலக்கிற்கான 20 முக்கிய சீர்திருத்தங்கள்

ஈக்விரஸ் நிறுவனம் ஐந்து முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு 20 சீர்திருத்தத் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.

எல்பிஜி மற்றும் எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது, இந்திய ரயில்வேயைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, சிங்கப்பூரின் தெமாசெக் மாதிரியில் புதிய இந்திய இறையாண்மை நிதியை உருவாக்குவது போன்றவை அதில் அடங்கும்.

மேலும், அட்வான்ஸ் வரியை ரத்து செய்வது மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திர சந்தையை வலுப்படுத்துவது போன்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நன்மைகள்

சாதாரண இந்தியக் குடும்பங்களுக்கு இதனால் கிடைக்கும் நன்மைகள்

இந்த 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது வெறும் அரசின் இலக்கு மட்டுமல்லாமல் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.

வேகமான பொருளாதாரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மற்றும் திறமையான தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும்.

சிறந்த கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சுகாதார வசதிகள் மூலம் நாட்டின் உழைக்கும் இளைஞர் பட்டாளத்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலமாக மாற்ற முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT