LOADING...
இந்தியாவில் ரூ.18,000 கோடி முதலீடு செய்யும் IKEA; தமிழக நகரங்களில் ஆன்லைன் விற்பனை தொடக்கம்
இந்தியாவில் ரூ.18,000 கோடி முதலீடு செய்யும் IKEA

இந்தியாவில் ரூ.18,000 கோடி முதலீடு செய்யும் IKEA; தமிழக நகரங்களில் ஆன்லைன் விற்பனை தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
12:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் சில்லறை வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுவீடனின் IKEA நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 2.2 பில்லியன் டாலர் (சுமார் ₹18,000 கோடிக்கும் மேல்) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது புதிய கடைகளைத் திறப்பதற்கும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. IKEA இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் அந்தோணி இது குறித்துக் கூறுகையில், தற்போது இந்தியாவில் உள்ள 6 கடைகளின் எண்ணிக்கையை 30-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தனது கிளைகளை அந்நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது.

ஆன்லைன் விற்பனை

சென்னை, கோவைக்கு விரைவில் ஆன்லைன் டெலிவரி வசதி

ஒரு நகரத்தில் நேரடி விற்பனை நிலையத்தை திறப்பதற்கு முன்பாகவே அங்கு ஆன்லைன் சேவையை தொடங்க IKEA திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் விரைவில் ஆன்லைன் ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை 930 மில்லியன் டாலராக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரும்பும் இளம் நுகர்வோரைக் கவரும் வகையில் டிஜிட்டல் விற்பனைக்கு IKEA அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. IKEA-வின் இந்த ஆன்லைன் வர்த்தக திட்டம் மற்றும் முதலீடு குறித்த தகவலை தமிழக அமைச்சர் TRB ராஜாவும் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் சென்னையில் IKEA கிளை மற்றும் தயாரிப்பு தொழிற்சாலை திறக்கவும் அவர் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement