
ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் இரு மகள் மற்றும் ஒரு மகளை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நியமிப்பதற்கான ஓட்டெடுப்பு நடைபெறவிருக்கிறது.
ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகிய மூவரையும் நிர்வாகமற்ற, சுதந்திரமற்ற இயக்குநர்களாக நியமிப்பதற்கான ஓட்டெடுப்பாக நடத்தப்படவிருக்கிறது.
இந்த ஓட்டெடுப்பில் பங்குதாரர்கள் ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறது இன்ஸ்ட்டிட்யூஷனல் முதலீட்டாளர்களுக்கனா அலோசனை சேவை வழங்கும் IiAS நிறுவனம்.
இந்நிறுனமானது, 800-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஓட்டெடுப்புகளில் பங்குதாரர்கள் யாருக்கும் ஓட்டளிக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கி வந்திருக்கிறது.
ரிலையன்ஸ்
ஏன் ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்?
கார்ப்பரேட் ஓட்டெடுப்புகளில் வாக்களிப்பது தொடர்பான பல்வேறு விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி, 30 வயது நிறைவடையாத அல்லது 10 ஆண்டுகள் வரை அனுபவமில்லாதவர்களுக்கு எதிராக வாக்களிக்கவே இதுவரை பரிந்துரை செய்து வந்திருக்கிறது அந்நிறுவனம்.
28 வயதாகும் ஆனந்த் அம்பானி, மார்ச் 2020 முதல் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுள் ஒன்றான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெற்று செயல்பட்டு வருகிறார்.
ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த போதும், ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி ஆகியோருக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்திருக்கிறது IiAS நிறுவனம்.
அடுத்த ஐந்தாண்டுகள் வரை தன்னுடைய தலைவர் பதிவியில் நீடிக்கவிருக்கும் முகேஷ் அம்பானி, இந்த காலத்திற்குள் தன்னுடை மகன்கள் மற்றும் மகளுக்கு வேண்டிய பயிற்சிகளைக் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.